aap crowds

புதுச்சேரியில்… கட்சியை பலப்படுத்த என்ன வழி….

புதுச்சேரி சின்னஞ்சிறு மாநிலம்…

நான்கு பகுதிகள்… உள்ளடக்கியது..

புதுச்சேரி காரைக்கால் மாஹே ஏனாம்…

5.நகராட்சிகள்..

117 வார்டுகள்…

108 கிராம பஞ்சாயத்துக்கள்…

810 பஞ்சாயத்து வார்டுகள்.

 

8 கொம்யூன் பஞ்சாயத்துக்கள்….

மொத்த சுற்றளவு 490 ச கிமீ

மொத்த மக்கள் தொகை 15 லட்சம்…

நகராட்சியில்
… வார்டுகளில்.. 6500 வாக்காளர்கள்

பஞ்சாயத்துக்கள் 2500 வாக்காளர்கள்…

பஞ்சாயத்து வார்டுகளில் 600 வாக்காளர்கள்…

இது தான் புதுச்சேரி…

இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றால் இரண்டு நாட்களில்… புதுச்சேரியை சுற்றி பார்த்து விடலாம்.
.
இப்போது அரசியல் நிலை பாட்டுக்கு செயல்பாட்டுக்கு. வருவோம்…..

மக்கள் சாதி மதம் இனம். மொழி ஆகியவற்றால் பிரிக்கப்பட்டதோடு பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் அவலநிலை க்கு தள்ளப்பட்டுள்ளனர்….

இவர்களை இந்த அவல நிலையில் இருந்து காப்பாற்ற கடுமையான உழைப்பு தேவை…

108 கிராமங்களில்… ஊருக்கு பத்து பேரை தேர்ந்தெடுங்கள்…

அவர்களுக்கு பயிற்சி கொடுங்கள்…

குறிப்பாக இளைஞர்கள்.. இளம் பெண்கள் இருந்தால் நல்லது…

40 சதவீத வாக்குகள் இவர்களிடம் தான் உள்ளது…

சமூக அக்கறையை சமூக நலனை ஊட்ட இவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தல் அவசியம்….

இந்த பத்து பேரில். ஒருவரை இப்போதே தலைவர் பதவிக்கு நியமனம் செய்வது அவசியம்….

இவர்களுடைய முக்கிய பணிகள் இவை களாக இருக்க வேண்டும்… முக்கிய இலக்காக இதைக் கொண்டு செயல்படுதல் அவசியம்….

கிராம நிர்வாகம்..
கோவில் நிர்வாகம்
கூட்டுறவு நிர்வாகம்
அரசு நிர்வாகம்…
அடிப்படை வசதிகள்…

இவை ஐந்தும் முக்கிய கண்காணிப்பு கடமைகள்…

இதில்… அரசு. புறம்போக்கு ஆக்கிரமிப்பு…. கூட்டுறவு சங்கங்களின். முறைகேடுகள்… அரசு நிருவாக சீர்கேடுகள்..
கோவில் நிர்வாக முறைகேடுகள்.

சாலைகள் சீரமைக்க கோரிக்கை வைத்தல்…

சுகாதார குடிநீர் வசதி பெற்று தருதல்…

பள்ளிக்கூட நடவடிக்கைகள் கண்காணித்தல்…

இப்படி கிராம பொதுக் காரியங்களில் கண்காணிப்பு செய்தல்…

தகவல் பெறும் உரிமை சட்டத்தை இதற்கு பயன்படுத்துதல்…

மக்களிடம் உண்மைகளை ஊழல்களை முறைகேடுகளை. அம்பலப்படுத்துதல்….

இதற்கு கிராமத்துக்கு தேவை குறைந்த பட்சம் 10 மூங்கில் தட்டிகள் மக்கள் கூடும் இடங்களில் வைத்தால் நல்லது….

ஊழல்களை நோட்டீஸ் அடித்து மக்களிடம் கொண்டு செல்வது நல்லது….

கூட்டுறவு சங்கங்கள்..
கோவில் நிர்வாகங்கள் செயல் பாடுகள் சொத்துக்கள் இவற்றை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று மக்களிடம் அறிவிப்பது மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு வெற்றியை பெற்று தரும்…

இதற்கான செலவுகளை மக்களிடம் நிதி வசூலிக்கலாம்…

ஊரில் நல்லது நடக்காதா என ஏங்கும் பெரியவர்கள் நல்லவர்கள் இருக்கின்றனர்.
. அவர்கள் கொடுத்து உதவுவர்…

இந்த சமூக மாற்றத்திற்கு உங்களின் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வு தேவை….

முதல் கட்ட பணியானது…

கிராமங்களை நோக்கி..

நகர வார்டுகளை நோக்கி…

கிராமத்துக்கு பத்து பேர்…

நகர வார்டுக்கு 25 பேர்…

இதை தேர்ந்தெடுப்பது தான் முதல் கட்ட பணி…

குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை வைத்து பஞ்சாயத்து ஆணையருக்கு… மனு அளிப்பதோடு தட்டியிலும் எழுதி தெருவுக்கு தெரு வைக்க வேண்டும்…

கோவில் சொத்துக்கள்… கூட்டுறவு சங்க வரவு செலவு கணக்குகள்… அரசு புறம்போக்கு நிலம் ஆக்ரமிப்பு ஆகியவற்றை தகவல் பெறும் உரிமை சட்டம் கீழ் பெற்று மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்…

நமக்காக கேட்பதற்கு உண்மையிலேயே ஒரு இளைஞர் படை இருக்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்தால் போதும்..

வெற்றி உங்களுக்கு தான்….

இப்போதே கிராமத்துக்கு பத்து இளைஞர்கள் ஆம் ஆத்மி கட்சியில்…சேருங்கள்…

உங்களுக்கு அது வழிகாட்ட தயாராக இருக்கிறது…..

ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும்… ஒவ்வொரு கிராமமாக சென்று இத்தகைய குழுவை ஆரம்பிப்பது அவசியமான பணி….

இதற்காக அதன் தொண்டர்களுக்கு தேவை விரிவான விழிப்புணர்வு….

புதுச்சேரியில் உள்ள தீராத பிரச்சனைகள்…
இளைஞர்கள் படும் அவலநிலைகள்.
. தொழிலாளர்கள் நிலை…
இதைப் போக்க என்ன வழி…

இதற்கு சரியான விடை…

முதல் ஆயுதம்…

பாராளுமன்றத்துக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது…
இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி திட்டங்களும்.. நல்ல சட்டங்களும் உருவாகும்…

இரண்டாவது ஆயுதம்…

சட்டமன்றம்… இதற்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்தல்….
மாநில வளர்ச்சி.. மாநில மக்கள் நலன்.. மக்கள் நலன் சார்ந்த சட்டங்கள் உருவாக்குதல்..

மூன்றாவது ஆயுதம்…

உள்ளாட்சி மன்றம்…. தகுதியான. உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்…

இதன் மூலம் அடிப்படை வசதிகள் பெறுதல்…
தரமான சாலைகள்.. தரமான கல்வி.. தரமான மருத்துவம்..

இது முற்றிலும் மக்கள் அதிகாரம். கொண்ட அமைப்பு….
இதிலும் நாம் கோட்டை விட்டால்…

இறுதியாக இருக்கும் இரண்டு ஆயுதங்கள்…

ஒன்று…

தகவல் பெறும் உரிமை சட்டம்…

இதன் மூலம். அரசாங்கத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.. ஊழலை ஒழிக்க இது உதவும்…
இது நமக்கு அரசு அளித்த முழு அதிகார சட்டம்… இதை பயன்படுத்தி முழு பயனை அடையலாம்…

இரண்டு…

சேவை பெறும் உரிமை. சட்டம்…

இந்த சட்டம் மூலம்… அரசுத் துறைகள். நம்மை நாடி வந்து நமக்கு சேவைகள் செய்வது இந்த சேவை பெறும் உரிமை சட்டத்தின். முக்கிய பணி…

நாம் அரசு அலுவலகங்கள் தேடி அலைய வேண்டியதில்லை…
அவர்கள் நம்மை தேடி வந்து உரிய சான்றிதழ்கள் வழங்கும் வகையில் இந்த சட்டம் உதவும்…
இதனால் எம் எல் ஏ அலுவலகம் செல்ல தேவையில்லை… அல்லக்கைகளின் உதவிகள் நமக்கு தேவையில்லை…
மக்களுக்கு உரிய மரியாதை இந்த சட்டத்தின் மூலம் கிடைக்கும்….

இந்த ஐந்து ஆயுதங்களை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பதே நம் முன் உள்ள மிகப்பெரிய கேள்விக்குறி….

இதை உங்கள் மனசாட்சி தான் முடிவு செய்ய வேண்டும்….

இந்த ஐந்து ஆயுதங்களை நம் எதிர்கால நலனுக்காக..
எதிர்கால தலைமுறைக்காக…

சரியாக பயன்படுத்த வேண்டுகிறோம்….

இது துருப்பிடித்தால் நம் நிலையும் அதேபோல் ஆகிவிடும்…

இதை மிக உணர்ந்து உள்ளாழ்ந்து நடந்தால் நமக்கும் நலம்..

நாட்டுக்கும் நலம்

நாட்டு மக்களுக்கும் நலம் உண்டாகும்….

ஐம்பெரும் பஞ்ச பூதங்கள் எப்படி நம்மை கலக்கிறதோ…

அதேபோல்…

இந்த ஐந்து பஞ்ச ஆயுதங்களை வைத்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்

மக்களை பாதுகாக்க… ஐம்பெரும் பஞ்ச பூதங்கள் இருக்கின்றன…
நீர் நிலம் காற்று ஆகாயம் நெருப்பு…. ஆகியன…

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களை பாதுகாக்கின்றன….

இதே போல் மக்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள… தங்களுக்கு பேராபத்து க்களில் பாதுகாக்க… இந்த நவீன உலகில் சர்வ வல்லமை படைத்த ஐந்து ஆயுதங்கள் என்ன…

இதற்கு சரியான விடை என்ன….

விடை க்கான சிறு பின்குறிப்பு…

இதை வைத்து சரியாக செயல்பட்டால்… தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்….

 

தொகுப்பு: ராமு கோவிந்தராஜ் (ஆம் ஆத்மி கட்சி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »